×

லாரி, கார், சொகுசு பஸ் அடுத்தடுத்து மோதி விபத்து

 

சேலம், ஏப்.26: சேலம் திருமகள் பை-பாஸ் சாலையில் கோவை, மதுரை சாலைகள் பிரியும் இடத்தில் பட்டர்பிளே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் உள்ள சேலம்-மதுரை பைபாஸ் சாலையில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளானது. அதிகாலை 1 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த செந்தில் (40), தனது குடும்பத்தாருடன் காரில் மதுரை நோக்கிச்சென்றார். அந்த கார், பாலத்திற்கு அடியில் சென்றபோது, திடீரென முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. அதில், இடிபாடுக்குள் செந்தில், அவரது மகள் ஜீவனா (15) ஆகியோர் சிக்கினர். இந்த விபத்து நடந்த அடுத்த சில நிமிடங்களில் பின்னால் வந்துகொண்டிருந்த பெங்களூரு-கொச்சின் சொகுசு பஸ், காரின் மீது லேசாக மோதி நின்றது.

அப்போது வேகமாக பின்னால் வந்த கல் லோடு ஏற்றிய லாரி, சொகுசு பஸ்சின் மீது பயங்கரமாக மோதியது. இதில், லாரியின் டிரைவர் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி பகுதியை சேர்ந்த தண்டபாணி (32) படுகாயமடைந்தார். அடுத்தடுத்து 4 வாகனங்கள் விபத்தில் சிக்கிய தகவல் அறிந்து சூரமங்கலம் மற்றும் அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடம் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில், காயமடைந்த செந்தில், அவரது மகன் ஜீவனாவை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். லாரி டிரைவர் தண்டபாணி, சேலம் அரசு மருத்துவவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவ்விபத்தினால், அதிகாலை வேளையில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை ேபாலீசார் சீர்படுத்தினர்.

The post லாரி, கார், சொகுசு பஸ் அடுத்தடுத்து மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Salem ,Coimbatore ,Madurai ,Salem Thirumal By-pass Road ,
× RELATED கோவையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்